மாணவர்கள் சான்றிதழ் நகல் பெற இணையதளம்

81பார்த்தது
மாணவர்கள் சான்றிதழ் நகல் பெற இணையதளம்
கல்லூரி, பல்கலைக்கழக சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் சான்றிதழ் நகல் பெற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. புயல், வெள்ளம் காரணமாக கல்லூரி, பல்கலைசான்றிதழ்களை இழந்த மாணாக்கர்கள் நகல்களை கட்டணமின்றி பெற www.mycertificates. in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணாக்கர்களும் இதில் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கெள்ளலாம்.

தொடர்புடைய செய்தி