கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடான தைவானில் ஞாயிற்றுக்கிழமை பயங்கர
நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. தைவானில் உள்ள தைடுங் கவுண்டி அருகே 16.5 கி.மீ ஆழத்தில் இந்த
நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் மாவட்டத்தில் அதிர்வு ஏற்பட்டது. மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடினர். எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.