கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். தொடர்ந்து, சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டார். முன்னதாக பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். பிரதமர் மோடியின் ஆய்வின்போது கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் ஹெலிகாப்டரில் உடன் பயணம் செய்தார். நிலச்சரிவில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் சிலருடன் மோடி உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.