ஆர்பாட்டம் செய்தவர்களுக்கு கொலை மிரட்டல்

72பார்த்தது
பொது பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காவல்துறையினரின் கண் முன்னே ஆக்கிரமிப்பு செய்த நபர் சட்டையை பிடித்து இழுத்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த பெண்ணால் பரபரப்பு


விருதுநகர் மாவட்டம் ஆர். ஆர். நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் சர்வே எண் 302/18 பொதுமக்கள் பயன்பாட்டிற்கான அரசு பொதுப் பாதை உள்ளதாகவும், இந்தப் பாதையை ஒரு சில தனியார் நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்துள்ளதாகவும்,

இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக பொதுமக்கள் புகாரின் அடிப்படையில் ஜூலை 2 ம் தேதி அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்,
இந்த நிலையில் ஆக்கிரமிப்பு செய்த நபர் சுற்றியுள்ள பொதுமக்களை இந்த பாதைக்குள் வரக்கூடாது என ரவுடிகளை வைத்து மிரட்டியும் பொது மக்களுக்கு ஆதரவாக செயல்பட்ட வழக்கறிஞர் ஞானப்பிரகாசம் வீடை கடப்பாரையால் தாக்கி வீட்டை உடைத்து ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்,

ஆக்கிரமிப்பு மற்றும் கொலை மிரட்டலையும் கண்டித்து காவல்துறையின் அனுமதியுடன் ஆர். ஆர். நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

தொடர்புடைய செய்தி