விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஜி. எஸ். டி. மஹாலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு கழகம் - காவேரி படுகை (ONGC) இணைந்து இரத்த சோகையற்ற விருதுநகரை உருவாக்குவோம் என்ற முன்னெடுப்பில், வளரிளம் பெண்களுக்கான இரத்தச்சோகை ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் இரும்புக் கண்மணிகள் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் தொடங்கி வைத்து, ஊட்டச்சத்து தொகுப்புகளை மாணவிகளுக்கு வழங்கினார்.
இந்த திட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் வளரிளம் பெண்கள் இரத்தசோகையற்ற, ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.