ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் தனுஷ் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், நடிகை நயன்தாரா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், “நான் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, பொய்யாக திரித்து, ஒரு கதையை உருவாக்கி அதில் சில 'பஞ்ச் வசனங்களை' சேர்த்து அடுத்த இசை வெளியீட்டு விழா மேடையில் நீங்கள் பேச வாய்ப்பு உள்ளது. ஆனால், அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.