நடிகர் தனுஷின் தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகளால் தானும், தனது கணவர் விக்னேஷ் சிவன் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பாங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிப்படைந்ததாக நடிகை நயன்தாரா வேதனை தெரிவித்துள்ளார். மேலும், ஒரு தயாரிப்பாளர் அவரது படங்களில் பணியாற்றும் கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், அவர்களின் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்த முடியுமா? என கேள்வியெழுப்பிய அவர், நீங்கள் தயாரிப்பாளர்தானே தவிர, சட்ட திட்டங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட பேரரசன் இல்லை என தெரிவித்துள்ளார்.