வளமான, நலமான, பசுமையான உலகில் குழந்தைகளை வளர்ப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குழந்தைகள் தினத்தையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மழலை மாறாத சிரிப்புடன் கற்பிதங்கள் இல்லா உள்ளத்துடன் உலகையும் சக மனிதர்களையும் எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நம்மை வடிவமைத்துக் கொள்வது ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதரின் கடமை. நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்றாமல், அவர்களது கனவுகள் ஈடேறத் துணை நிற்போம் என கூறியுள்ளார்.