விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தேனாம்பேட்டையில் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள வீட்டில் சோதனை நடக்கிறது. தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் தொடர்பான சோதனையில் ஒரு பகுதியாக அவரது மருமகன் ஆதவ் அர்ஜூனாவின் வீட்டிலும் சோதனை நடக்கிறது. இதனால் விசிக நிர்வாகிகள், தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்து வருகின்றனர்.