ஸ்ரீவில்லிபுத்துார் அருகே காட்டு யானைகள் தென்னை, மா மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சம்.
விருதுநகர் மாவட்டம் ,
ஸ்ரீவில்லிபுத்துார் வட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள வ. புதுப்பட்டி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள மூலக்காடு பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட ஏக்கரில் பகுதியில் விவசாயிகள் மா, தென்னை உள்ளிட்ட பல்வேறு விவசாய பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வரக்கூடிய மான், யானை, காட்டு மாடுகள், பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் நுழைந்து மா, தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து இறங்கிய இரண்டு காட்டு யானைகள் ரமா என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பிற்கு நுழைந்து 20-க்கும் மேற்பட்ட மாமரங்களையும், பத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் முற்றிலுமாக சேதப்படுத்தி உள்ளது. தற்போது கோடை மாங்காய்களை விவசாயிகளை பறிக்க விடாமல் யானைகள் தோப்பிருக்குள் நுழைந்து முற்றிலும் மரங்களை சேதப்படுத்தி உள்ளது. மேலும் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக போடப்பட்டுள்ள சொட்டுநீர் பைப்புகளையும் சேதப்படுத்தி இருப்பதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர். வனத்துறையினர் யானைகள் தோப்பிற்கு வராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.