ஸ்ரீவி: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மகிளா நீதிமன்றம்

69பார்த்தது
சிவகாசி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை. மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ 2000/- அபராதம் விதித்து மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் ஜெய்சிங் நகரை சேர்ந்த 59 வயது முதியவர் முருகேசன் என்பவர் அதே பகுதியில் உள்ள சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர்கள் கடந்த 15. 05. 2023 ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வந்த நிலையில் நேற்று மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் மேற்படி முருகேசனை குற்றவாளி என அறிவித்து, குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 2000/- அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி