சிவகாசி: ஆடிதபசு திருவிழாவின் நிறைவு விழா...

77பார்த்தது
சிவகாசி: ஆடிதபசு திருவிழாவின் நிறைவு விழா...
சிவகாசி சிவன் கோவில் 'ஆடி தபசு' திருவிழா நிறைவு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் கடந்த 14 நாட்களாக 'ஆடி தபசு' திருவிழா கோலாகலமாக நடைபெற்று வந்தது. ஆடி தபசு திருவிழாவை முன்னிட்டு தினமும் ஸ்ரீவிஸ்வநாத சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வந்தன. ஸ்ரீவிசாலாட்சி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கு ஸ்ரீவிஸ்வநாத சுவாமி தபசு காட்சி கொடுத்த நிகழ்ச்சி மற்றும் ஸ்ரீவிசாலாட்சி அம்மன் 'பூ பல்லக்கில்' எழுந்தருளி காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற்றது. 'ஆடி தபசு' திருவிழாவின் 15ம் நாள் திருவிழாவான இன்று காலை, ஸ்ரீவிஸ்வநாத சுவாமிக்கும் - ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அடுத்ததாக, உற்சவ சாந்தி பூஜைகளுடன் 'ஆடி தபசு' திருவிழா இனிதாக நிறைவு பெற்றது. சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகளும், நிகழ்ச்சி உபயதாரர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி