தமிழ் சினிமாவில் இருந்து வரும் பாலியல் புகாரில் 500 பேர் சிக்குவர்கள் என நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகையை புரட்டிப்போட்டுள்ள பாலியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழ் ஊடகத்திற்கு பேட்டியளித்த ரேகா நாயர், அனைத்து மொழி சினிமாவிலும் பாலியல் அத்துமீறல் உள்ளன. தமிழ் சினிமாவில் ஏதேனும் அறிக்கை வெளியானால் 500 பேர் சிக்குவார்கள். புகார் கூறும் நடிகைகளுக்கு பிரபல நடிகர்களால் மிரட்டல் வருகிறது என கூறியுள்ளார்.