சிவகாசி: கோவில்களில் சிறப்பு பூஜைகள்.....

569பார்த்தது
சிவகாசி: கோவில்களில் சிறப்பு பூஜைகள்.....
சிவகாசி கடைக்கோவிலில், புத்தாண்டு சிறப்பு பூஜை.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப் பண்டுக்கு சொந்தமான கடைக்கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஸ்ரீவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன. பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜை ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி