சாப்பாட்டில் தலைமுடி கிடந்தால் அது உறவை நீட்டிக்கும் என முன்னோர்கள் சொன்னதாக கூறப்படுவதுண்டு. இது உறவை நீட்டிக்கிறதோ இல்லையோ, நமது உடல்நலத்தை நீட்டிக்காது என்கின்றனர் மருத்துவர்கள். உணவில் முடி கிடப்பது உடல் சார்ந்த மற்றும் நுண்ணுயிரியல் சார்ந்த மாசுபாட்டை ஏற்படுத்தும். உணவில் நுண்ணுயிரிகள் உருவாவதற்கும் இது வழிவகுக்கும். உணவுகளில் பல நாட்களாக முடி கிடந்தால், அது நோய்க்கிருமிகளின் உற்பத்திக்கு வழிவகுக்கும்.