கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கைது

69பார்த்தது
விருதுநகர் அருகே ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை குடியிருப்பில் அந்நிறுவனத்தின் துணை மேலாளர் பாலமுருகன் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 13ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் நோட்டமிட்ட மர்ம நபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 80 சவரன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் 50 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றனர். இதுகுறித்து பாலமுருகன் வச்சகாரப்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக தனி படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர்களை அடையாளம் கண்ட போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கொள்ளையர்களை பிடிப்பதற்காக மத்தியபிரதேசம் சென்ற சிவகாசி ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டது. இதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மத்திய பிரதேசம் மாநிலம் பகோலி தார் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான பார்சிங் என்ற இளைஞரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி