கோமாரி நோய் தடுப்பூசி ஆட்சியர் தொடங்கி வைத்தார்

76பார்த்தது
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சிவஞானபுரம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற கால்நடைகளுக்கான 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் கோமாரிநோய் தடுப்பூசி முகாம் இன்று 10. 06. 2024 முதல் 10. 07. 2024 வரை நடைபெற உள்ளது.

கோமாரி நோய் ஒரு வைரஸ் கிருமியால் உண்டாக்கப்படும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாகும். இந்நோய் கண்ட கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால் பகுதிகளில் புண்களும், காய்ச்சல் மற்றும் தீவனம் உண்ணாமை ஆகிய அறிகுறிகளோடு சினையுற்ற கால்நடைகளுக்கு கருச்சிதைவு ஏற்படுவதோடு,

சினையின் தன்மை குறைந்து காணப்படும். இந்நோய் கொடிய தொற்று நோயாகும்.

கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது என்றும்,

தற்போது 5-வது சுற்று தடுப்பூசி போடும் பணி வருகிற இன்று 10. 06. 2024 முதல் 10. 07. 2024 வரை நடைபெற உள்ளது. அதனையொட்டி விருதுநகர் அருகே சிவஞானபுரம் ஊராட்சியில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்

தொடர்புடைய செய்தி