கோவை, துடியலூரில் உள்ள தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் இல்லம், அலுவலகத்தில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மார்ட்டினின் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் 2வது நாளாக சோதனை நடக்கிறது. மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் சிஆர்பிஎப் போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடக்கிறது. அதே போல் சென்னையில் உள்ள மார்ட்டினின் மருமகனும், விசிக துணை பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் அமலாக்கத்துறை 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.