சென்னை குன்றத்தூரில் தனியார் வங்கி மேலாளரின் வீட்டில் எலி தொல்லைக்கு வைத்த மருந்து நெடி பரவி, நேற்று (நவ.14) 2 குழந்தைகள் உயிரிழந்தனர். அதே பாதிப்பில் பெற்றோர் இருவரும் சிகிச்சையில் இருப்பதால், குழந்தைகள் இறந்ததை இன்னும் அவர்களிடம் தெரிவிக்க முடியவில்லை. இதன் காரணமாக குழந்தைகளை உடற்கூறாய்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.