ராஜபாளையம் நகராட்சி 15வது வார்டு காமராஜர் சிலை பின்புறம் நான்கு முக்கு ரோட்டில் வாறுகால் தரைப்பால பணிக்காக தோண்டப்பட்டு தாமதம் ஏற்பட்டு வந்ததால் அப்பகுதியை கடந்து செல்ல வழியின்றி குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டனர். அப்பகுதியில் இணைப்பு துண்டான குடிநீர் குழாய்கள் முதல் கட்டமாக சீரமைப்பு பணிகள் முடிந்தன. கழிவு நீருடன் குடிநீர் சப்ளை தொடர்கிறதா என்ற ஆய்வு நடந்தது. இதனை அடுத்து தரைப்பாலம் கீழ்பகுதியில் கழிவுநீர் வெளியேற்றி வாறுகால் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. அடுத்த கட்டமாக தரைபாலம் அமைக்கும் பணி தொடங்க உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.