கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் துவக்கம்

1060பார்த்தது
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் துவக்கம்
அருப்புக்கோட்டை ஸ்ரீ தாதன்குளம் விநாயகர் கோவில் & படித்துறை விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் துவக்கம்; அறநிலை துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்பு.

அருப்புக்கோட்டை அகமுடையார் மஹால் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ தாதன்குளம் விநாயகர் கோவிலில் வரும் 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதேபோல சொக்கலிங்கபுரம் படித்துறை விநாயகர் கோவிலில் நாளைக்கு பிப்ரவரி 21 அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த கோவில்களில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. பிப்ரவரி 20 காலை 9. 30 மணி முதல் கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி பூஜை யாகசாலை பூஜை என தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஒன்பது யாகசாலைகள் அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கும்பாபிஷேக பூஜை விழாக்களில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள், மாவட்ட அறங்காவல் குழு நிர்வாகிகள், மகா கும்பாபிஷேக நிர்வாக குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி