கலைஞர் நூலகத்தை திறந்து வைத்த அமைச்சர்

76பார்த்தது
*விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். *

நகர்புற மற்றும் கிராமப்புற மாணவர்கள் எளிதில் கல்வி கற்று அறிவை வளர்த்துக் கொள்ளும் விதமாக கலைஞர் நூலகம் திறந்துவைக்கப்பட்டு மாவட்டம் தோறும் செயல்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு ஏற்பாட்டில் கலைஞர் நூலகம் அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் முன்பு துவங்கப்பட்டுள்ளது இதனை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் கலைஞர் படிப்பாக நூலகத்தை திறந்து வைத்து புத்தகங்களை பார்வையிட்டார் இந்த நூலகத்தில் அரசு போட்டி தேர்வுக்காக படிக்கும் புத்தகங்களும் கதை கவிதை பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜி பி ராஜா விருதுநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் முன்னாள் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினருமான தனுஷ் குமார் மாவட்ட இளைஞர் துணை அமைப்பாளர்கள் ரவிக்கண்ணன் பாசறை ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி