பல நூறு ஆண்டுகளாக பழமை மாறாமல் நடைபெறும் திருவிழா

1424பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சி கிராமத்தில் அருள்மிகு உய்யவந்த அம்மன் அருள்மிகு ஸ்ரீ பெத்தண்ணவாமி திருக்கோவில் திருவிழா ஐந்து ஆண்டுகளுக்குப் பின் கோலாகலமாக பழமை மாறாமல் நடைபெற்றது

டிசம்பர் 1
அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி கிராமத்தில் அருள்மிகு உய்யவந்த அம்மன் அருள்மிகு ஸ்ரீ பெத்தண்ணசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் பெத்தண்ணசாமி நிஜக்குதிரையில் உலா வரும் திருவிழா வெகு விமர்சையாக கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு சமூகத்தைச் சார்ந்த 18 கிராமங்களை சார்ந்த கிராம மக்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நிஜ குதிரைக்கு பாத பூஜை செய்து பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பின் பெத்தண்ணசாமி குதிரை நகர்வலம் வந்தது பின்னர் உய்யவந்தம்மண் ஆலயத்திலிருந்து வேட்டைக்காக பெத்தண்ணசாமி குதிரை புறப்பட்டுச் சென்றது காட்டுப்பகுதியில் வேட்டைக்குச் சென்ற குதிரை மீண்டும் உய்யவந்தம்மன் ஆலயத்தில் வந்தடைந்தபின் சுவாமிக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வரவேற்று குதிரை மீது வைக்கப்பட்டுள்ள பெத்தண்ணசாமி சிம்மாசனத்தை கீழே இறக்கி மீண்டும் சுவாமியின் பூஜை அறையில் கொண்டு வைத்தனர். இத்திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து பெத்தண்ணசாமி அருளை பெற்று சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி