அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் நீராவி காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சூரிய ஒளி மூலவர் மீது படும் நிகழ்வு நடைபெற்றது. சூரிய ஒளி மூலவர் மீது படும் நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு வழிபட்டனர். மேலும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சூரிய பகவானுக்கும், மூலவர் காசி விஸ்வநாதருக்கும் பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காசி விஸ்வநாதரை வழிபட்டனர்.