அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் இருந்து பாலவநத்தம் செல்லும் சாலை பல மாதங்களாக மிக மோசமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. பாளையம்பட்டி, கோபாலபுரம், கோவிலாங்குளம் பகுதி மக்களும், விவசாயிகளும் விருதுநகர் செல்வதற்கும், தங்களது விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும் இந்த பாதையை தான் பயன்படுத்துகின்றனர். மோசமான இந்த சாலையால் மழை நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி இந்த சாலையில் சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.