விருதுநகர்: சாலைவசதி இன்றி தவிக்கும் பொதுமக்கள்

63பார்த்தது
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள ஆதித்தனேந்தல் பகுதியை சேர்ந்த ராமுத்தாய் (65). இவர் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இதனையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அவரது உடலை அடக்கம் செய்ய தயாரான நிலையில் ஆதித்தனேந்தல் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல பல வருடங்களாக சாலை வசதியே இல்லையென கூறப்படுகிறது.

இதனால் ஆண்டாண்டு காலமாக இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு தூக்கி சென்று அடக்கம் செய்வதில் கடும் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இறந்தவரான ராமுத்தாய் உடலை அடக்கம் செய்வதற்காக இன்று சுடுகாட்டிற்கு தூக்கி சென்ற நிலையில் மயானத்திற்கு செல்ல சாலை வசதியில்லாத காரணத்தால் தற்போது விவசாயம் செய்துள்ள விளை நிலங்கள் வழியாக கடும் சிரமத்திற்கிடையே 2 கிமீ தூரம் தூக்கி சென்று இறுதி சடங்குகளுடன் அடக்கம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி