அருப்புக்கோட்டை ஜீவா லாட்ஜ் பகுதியில் உணவகத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயம் நான்கு பேர் மீது வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மறவர் தெருவை சார்ந்தவர் உதயகுமார் இவர் அருப்புக்கோட்டை பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருவதாகவும் அந்த கடைக்கு சாப்பிட வந்த முனியாண்டி என்பவர் மாரியப்பன் என்பவரிடம் புகையிலை கேட்டதாக கூறப்படுகிறது புகையிலை எடுத்துக்கொண்டு திருப்பி தராமல் மாரியப்பன் அங்கிருந்து சென்றதை முனியாண்டி அதை கேட்டு சண்டை போட்டதாகவும் இதை அடுத்து தடுக்க முயற்சித்த உதயகுமாரை மாரியப்பன் மற்றும் அவருடன் இருந்த மூன்று நபர்கள் என மொத்தம் நான்கு நபர்கள் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது இதில் காயமடைந்த உதயகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்