வேடம்பட்டு கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம்

79பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் மருத்துவ கழிவு தொழிற்சாலையை அகற்ற கோரி இப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் அதன் மீது நடவடிக்கை எடுக்காததால் வேடம்பட்டு கிராம மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளனர். வேடம்பட்டு கிராமத்தில் 650 வாக்காளர்கள் உள்ள நிலையில் நன்னாட்டில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடி மையத்திற்கு வாக்களிக்க செல்லாமல் புறக்கணித்து வீட்டிலையே முடங்கி உள்ளனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் வாக்களிக்க செல்ல கிராம மறுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி