940 சிறப்பு பஸ்கள் இயக்கம்

80பார்த்தது
940 சிறப்பு பஸ்கள் இயக்கம்
விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், தேர்தல் விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் சென்று ஓட்டு போட வசதியாக சென்னையிலிருந்து 940 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் செய்திக்குறிப்பு:

வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தலை முன்னிட்டு, 17 மற்றும் 18ம் தேதிகளில் ஊர் திரும்புவோருக்கு கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், செஞ்சி, கடலுார், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, வடலுார், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, வேலுார், திருப்பத்துார், தர்மபுரி, ஓசூர், ஆரணி, செய்யாறு, காஞ்சிபுரம் ஆகிய ஊர்களுக்கு, அதிகளவில் பயணம் செய்வார்கள்.

இந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக 17ம் தேதி 450, 18ம் தேதி 490, என மொத்தம் 940 சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக www. tnstc. in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். விடுமுறை முடிந்து, பொதுமக்கள், பல்வேறு இடங்களில் இருந்து, மீண்டும் சென்னைக்குச் செல்ல 21ம் தேதி கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி