விழுப்புரம் அருகே சிந்தாமணி கிராமத்தில் நேற்று 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் உடல்நலம் பாதித்து இறந்து கிடந்தார். சிந்தாமணி வி. ஏ. ஓ. , சுகுணா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, இறந்த முதியவரின் சடலத்தை கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைத்தனர். இறந்தவரின் விபரங்கள் குறித்து இன்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.