அரகண்டநல்லூரில் சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றி

64பார்த்தது
அரகண்டநல்லூரில் சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றி
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட ஆசிரியர் நகர் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் மின் மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் வினி யோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த மின் மாற்றி சாய்ந்த நிலையில் உள்ளது. மின்மாற்றியை தாங்கி பிடித்து நிற்கும் மின்கம்பங்களில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளே இருக்கும் கம்பிகள் வெளியை தெரிவதை காண முடிகிறது. இதனால் இந்த மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விபத்து நிகழ வாய்ப்பு உள்ளது. இதை பார்த்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எப்போது என்ன நிகழுமோ என்கிற அச்சத்திலேயே உள்ளனர். இதை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். அதில் சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றியை சீரமைக்கக்கோரி அரகண்டநல்லூர் மின்வா ரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டராகிய தாங்கள் நேரில் வந்து பார்வையிட்டு சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றியை சீரமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்படுள்ளது.

தொடர்புடைய செய்தி