வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா அதிகாரிகள் சென்றதால் ஓட்டம்

77பார்த்தது
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா அதிகாரிகள் சென்றதால் ஓட்டம்
விக்கிரவாண்டி அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த போது பறக்கும் படையினர் வந்ததால் பணத்தை தெருவில் வீசிவிட்டு தப்பியோடினர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பம் கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு கட்சியினர் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர். அப்போது அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர் நடராஜன் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டு பிரகாஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த வழியாக காரில் சென்றனர்.

அதிகாரிகள் வருவதைப் பார்த்ததும் கட்சியினர் பணத்தை சாலையில் வீசிவிட்டு தப்பியோடினர். பறக்கும் படையினர் துரத்திச் சென்றும் பிடிக்க முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து அந்த நபர்கள் தெருவில் வீசிச் சென்ற 500, 200, 100 ரூபாய் நோட்டுகளை சேகரித்து எண்ணிய போது 25 ஆயிரத்து 200 ரூபாய் இருந்தது தெரிய வந்தது.

கைப்பற்றிய பணத்தை விக்கிரவாண்டி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பணத்தை சாலையில் வீசிச் சென்றவர்கள் யார் என்ற விபரம் குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி