திண்டிவனம் அருகே உள்ள ஓமந்துார் ஸ்ரீராம் சி. பி. எஸ். சி. , பள்ளியில் மகா சண்டி யாகம் நடந்தது.
திண்டிவனம்-புதுச்சேரி சாலையிலுள்ள ஓமந்துார் பள்ளியில், ஸ்ரீராம் டிரஸ்ட் சார்பில் நேற்று முன்தினம் மகா சண்டி யாகம் துவங்கியது. யாகத்தை நேபாள் நாட்டை சேர்ந்த மகந்த மன்கிரி தலைமையில், காசியை சேர்ந்த 6 சிவாச்சாரியர்கள் முன்னின்று நடத்தினர்.
துவக்க விழாவில், பள்ளியின் தாளாளர் முரளிரகுராமன், நிர்வாகி ஹரிகிருஷ்ணன், தென்கோடிப்பாக்பஞ்சாயத்து தலைவர் ராஜசேகர், முன்னாள் தலைவர் மல்லிகா, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மகா சண்டி யாகம் ஆக. , 4 ம் தேதி வரை நடக்கின்றது. ஏற்பாடுகளை ஸ்ரீராம் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.