மதுவிலக்கு பிரிவு ஏ. டி. ஜி. பி. , ஆய்வு

81பார்த்தது
மதுவிலக்கு பிரிவு ஏ. டி. ஜி. பி. , ஆய்வு
விழுப்புரம், கடலுார் மாவட்ட சாராய வழக்குகள் குறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஏ. டி. ஜி. பி. , அமல்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராய சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் சாராய ஒழிப்பில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஏ. டி. ஜி. பி. , அமல்ராஜ், நேற்று மாலை விழுப்புரம் எஸ். பி. , அலுவலகத்தில், விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் உள்ள சாராய வழக்குகளின் தேக்க நிலை, குற்றவாளிகள் கைது விபரம், சரக்குகள் பறிமுதல் செய்த விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

கள்ளச்சாராயம் விற்பனை முற்றிலுமாக ஒழிப்பதோடு, இதில் ஈடுபடுவோரை தடுப்பு காவலில் கைது செய்ய அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் டி. ஐ. ஜி. , திஷா மிட்டல், எஸ். பி. , தீபக் சிவாச் மற்றும் இருமாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி. எஸ். பி. , க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி