காப்பர் ஒயர் திருடியவர் கைது

64பார்த்தது
காப்பர் ஒயர் திருடியவர் கைது
காணை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 45; அதே பகுதியில் உள்ள இவரின் விவசாய நிலத்தில் இருந்த 40 அடி மோட்டார் காப்பர் கேபிள் திருடு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு 6, 000 ரூபாய் ஆகும்.

புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று பெரும்பாக்கம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது, சந்தேகப்படும்படி, நின்றிருந்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர் இந்திரா நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் சரண்ராஜ், 18; என்பதும், கிருஷ்ணமூர்த்தி நிலத்தில் காப்பர் ஒயர் திருடியதையும் ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிந்து சரண்ராஜை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி