விழுப்புரம் மாவட்டம் வானுார் மா. கம்யூ. , வட்டக்குழுவின் 24வது மாநாடு திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்தது. வட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு குமார், முத்துக்குமரன், ராஜேந்திரன், மாவட்ட குழு அர்ஜூனன் சிறப்புரையாற்றினர். வட்டக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், சேகர், சுந்தரமூர்த்தி, மாயவன், அன்சாரி உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், தமிழக அரசு சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கிராமங்களுக்கு மகளிர்களுக்கான இலவச பஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வானுார் பகுதியில் இருந்து புதுச்சேரி, விழுப்புரம் பகுதிக்கு செல்வதற்கு இதுவரை மகளிர்களுக்கான பஸ் வசதி கூட கிடையாது. எனவே மகளிர்களுக்கான பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். வீடில்லா ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.