கோவல் தமிழ்ச்சங்கத்தின் 91-ஆம் ஆண்டு விழா

78பார்த்தது
கோவல் தமிழ்ச்சங்கத்தின் 91-ஆம் ஆண்டு விழா
திருக்கோவிலூரில் கோவல் தமிழ்ச் சங்கத்தின் 91-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. திருக்கோவிலூரிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத்தின் தலைவா் பாவலா் சிங்கார உதியன் தலைமை வகித்தாா். ரோட்டரி கழக செயலா் டாக்டா் மு. செந்தில்குமாா், ராணுவ வீரா் மு. கல்யாண்குமாா், கல்லைத் தமிழ்ச் சங்கச் செயலா் செ. வ. மதிவாணன், மணலூா்பேட்டை தமிழ்ச் சங்கத் தலைவா் தா. சம்பத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், வரலாற்று ஆய்வாளா் துரை மலையமானுக்கு வாழ்நாள் இலக்கியச் சாதனையாளா் விருதை திருக்கோவிலூா் நகா்மன்றத் தலைவா் டி. என். முருகன் வழங்கினாா். கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட நூலக அலுவலா் மு. காசிம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வேட்டவலம் புலவா் தங்க. விசுவநாதன் எழுதிய டாக்டா் கலைஞா் கவிதை நூலையும், கவிஞா் மித்ராதேவி எழுதிய தோற்பதும் ஒரு வெற்றிதான் என்ற தன்னம்பிக்கை நூலையும் வெளியிட்டாா். அவற்றை அருட்கவிஞா் அருள்நாதன் தங்கராசு, கல்வெட்டு ஆய்வாளா் விழுப்புரம் வீரராகவன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவா் மு. கலியபெருமாள் நூல்களை ஆய்வு செய்து பேசினாா். சங்கப் புரவலா் டி. குணா கலந்து கொண்டு, பேச்சு, நடனப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுப் பட்டயம், பரிசுகள் வழங்கினாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி