குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9ஆம் தேதி நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியானது. சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜனவரி மாதம் கலந்தாய்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.