அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்சுக்கு யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று அண்மையில் சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது உள்ளிருந்த வாலிபர் ஒருவர் தனது இருக்கையின் மீது திடீரென ஏறி அதை பின்பக்கமாக எட்டி உதைத்து ஆவேசத்துடன் மிக மோசமாக நடந்து கொண்டார். விமானம் தரையிறங்கிய பின்னர் அவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.