சபரிமலை சென்ற பேருந்து கவிழ்ந்து 15 தமிழக பக்தர்கள் காயம்

79பார்த்தது
சபரிமலை சென்ற பேருந்து கவிழ்ந்து 15 தமிழக பக்தர்கள் காயம்
கேரளா: பாலக்காடு வடக்கஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அஞ்சுமூர்த்தி மங்கலம் அருகே சபரிமலை பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து நள்ளிரவு 12.30 மணியளவில் நடந்துள்ளது. திருத்தணியில் இருந்து 25 பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து, டிவைடரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து, பின்னால் வந்த லாரி ஒன்று பேருந்தின் மீது மோதியது. காயமடைந்தவர்கள் ஆலத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி