மும்பை அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏர் இந்தியா பெண் விமானி தற்கொலை செய்து கொண்டார். சிருஷ்டி தூலி (25) என்ற இளம் விமானி சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் காதலன் ஆதித்யா பண்டிட் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதித்யாவின் தவறான நடத்தையால் சிருஷ்டி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். அதே போல் அசைவ உணவு உண்பதை நிறுத்துமாறு கூறி சிருஷ்டியை துன்புறுத்தி வந்ததாக கூறுகின்றனர்.