மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலை ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பயன்படுத்த அவரது மகனும், பாடகருமான எஸ்.பி.பி. சரண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் எனது தந்தையின் குரலை பயன்படுத்த பலரும் என்னிடம் அனுமதி கேட்கின்றனர். அதற்கு நான் மறுப்பு தெரிவித்து விட்டேன். ஏ.ஐ. மூலம் அவரது குரலை கேட்க விருப்பம் இல்லை, தொழில்நுட்பத்தில் பயன்படுத்தும் குரல் உணர்வுபூர்வமாக இருக்காது” என்றார்.