மரக்காணத்தில் காரில் குட்கா கடத்தல் 190 கிலோ குட்கா பறிமுதல்

2602பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் பாபு தலைமையிலான காவலர்கள் மரக்காணம் அரசு பள்ளி அருகே வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்,

சோதனையில் காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 85 கிலோ குட்கா பொருட்கள் மூட்டையில் இருந்துள்ளது. இதனைக் கண்ட போலீசார் அதனை பறிமுதல் செய்து காரில் இருந்தவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மூவரும் மரக்காணம் இ. பி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவர் மகன் ரவிச்சந்திரன் வயது 58, ரவிச்சந்திரன் என்பவரது மகன் அரவிந்த் குமார் வயது 31, அண்ணாதுரை மகன் சசிகுமார் வயது 48 என்பது தெரிய வந்தது, இவர்களிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் இவர்களுக்கு குட்கா விற்பனை செய்த நபர் ஆலத்தூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அங்கு வரைந்த போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 105 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து அவரிடம் மேற்கொண்டு விசாரணையில் அந்த நபர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் குவாலி கவுடா பகுதியை சேர்ந்த குருமால் மகன் விஜயகுமார் வயது 38 என்பவரையும் கைது செய்து அவரிடமும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்த குட்காவின் மதிப்பு 4 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி