ஒலக்கூர் ஒன்றியக்குழு கூட்டம் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

50பார்த்தது
ஒலக்கூர் ஒன்றியக்குழு கூட்டம் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ஒலக்கூர் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் தலைமையில் நடந்தது. ஒன்றிய துணை சேர்மன் ராஜாராம், பி. டி. ஓ. , க்கள் ரவி, சரவணக்குமார், மேலாளர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கிய சில நிமிடத்தில், ஒன்றியக்குழு கூட்டத்திற்கு வேளாண், கால்நடை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் வராததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றிய கவுன்சிலர்கள் அண்ணாதுரை, சிலம்பரசன், விஜய்பிரபாகரன், ஜனாத்தன் ஆகியோர் பகல் 12: 00 மணிக்கு வெளிநடப்பு செய்தனர். சில துறை அதிகாரிகள் கால தாமதமாக வந்தனர். ஒன்றிய சேர்மன் கேட்டு கொண்ட பின்பு 4 கவுன்சிலர்களும் மீண்டும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக 23 தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி