திண்டிவனத்தில் அதிமுக பாமகவினர் மோதல்

7429பார்த்தது
திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 12-வது வார்டு தீர்த்த குளம் பகுதியில் நகராட்சி சார்பில் புதிய கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் திறக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. இது குறித்து பாமக தரப்பினரும். அதிமுக தரப்பினரும் மாறி மாறி கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று இது சம்மந்தமாக அந்த பகுதியின் அதிமுக கவுன்சிலர் சரவணனின் தம்பி குமாருக்கும், பாமக நிர்வாகி கார்திக்கிற்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டு பின்பு கைகலப்பாக மாறியுள்ளது.
பாமக நிர்வாகி கார்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் இதில் கவுன்சிலர் தம்பி
குமார்க்கும் காயம் ஏற்ப்பட்ட நிலையில் இருவரும் திண்டிவனம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்பு. கார்த்திக் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு வந்த பாமக நிர்வாகிக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறி பாமக நிர்வாகிகள்அதிமுக கவுன்சிலர் தம்பியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திண்டிவனம் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரிடம் முறையிட்டனர் அப்பொழுது திண்டிவனம் இன்ஸ்பெக்டரிடம் பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதில் இன்ஸ்பெக்டர் கோபமாக பேசியதாக கூறப்படுகிறது இதை கண்டித்து பாமகவினர் இன்ஸ்பெக்டர் வாகனத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி