விழுப்புரத்தில் மண் பானைகள் விற்பனை மும்முரம்

50பார்த்தது
விழுப்புரத்தில் மண் பானைகள் விற்பனை மும்முரம்
கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் குளிர்சாதன பெட்டியாக திகழும் மண் பானைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. விழுப்புரம் அருகே உள்ள சாலைஅகரம், ராகவன்பேட்டை ஆகிய இடங்களில் மண்பாண்ட தொழி லாளர்களால் தயார் செய்யப் பட்டு சாலையோரத்தில் மண் பானைகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன இங்கு சாதாரண மண் பானைகள், குழாய் பொருத்தப்பட்ட மண் பானைகள் மற்றும் சிறிய அளவிலான குடுவைகளும் விற்பனைக்காக உள்ளன. இதில் சாதாரண மண் பானைகள் ரூ. 100- ல் இருந்து ரூ. 300 வரையும், குழாய் பொருத்தப்பட்ட மண் பானைகள் ரூ. 200-ல் இருந்து ரூ. 300 வரையும், குடு வைகள் ரூ. 80-ல் இருந்து ரூ. 1. 50 வரையும் விற்பனை செய்யப் படுகிறது. இவற்றைபொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி