நாட்டுப்புறக் கலைஞர்கள் நல சங்க 5ம் ஆண்டு விழா

553பார்த்தது
திண்டிவனத்தில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுபுற கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் ஐந்தாம் ஆண்டு வீரபத்திர சுவாமி வம்சவழி உடுக்கை, பம்பை, சிலம்பு கலை சங்க விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு சங்கக் கொடியினை மாநில தலைவர் சத்யராஜ் ஏற்றி வைத்தார். தொடர்ந்து வீரபத்திர சுவாமி, கலைமகள் சரஸ்வதி சுவாமி மற்றும் டி. டி. சங்கரதாஸ் சுவாமிகளுக்கு தூப தீப ஆராதனை செய்யப்பட்டது. முன்னதாக திண்டிவனம் தர்மராஜா கோவிலில் இருந்து
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பம்பை, உடுக்கை, சிலம்பு கலைஞர்கள் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி