
செஞ்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றும்
செஞ்சி பகுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அனுமதி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செஞ்சி ஒன்றிய கூட்டம் சேர்மன் விஜயகுமார் தலைமையில் நேற்று நடந்தது. பி.டி.ஓ.க்கள் நடராஜன், பிரபா சங்கர் முன்னிலை வகித்தனர். ஏ.பி.டி.ஓ. பழனி வரவேற்றார். கூட்டத்தில், 13 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறுபாலம், பைப்லைன் அமைக்க பணிகள் தேர்வு செய்யப்பட்டது. மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவது குறித்து அறிவிப்பு செய்ததற்கும், விழுப்புரத்திற்கு ஆய்வுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், செஞ்சி பகுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என அறிவித்ததற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் பச்சையப்பன், துரை, மணி, அன்னம்மாள், செண்பக பிரியா, பனிமலர், ஞானாம்பாள், சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.