விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் புதுச்சேரி நோக்கி சென்ற மகேந்திரா காரின் முன்பக்க டயர் வெடித்ததில் எதிரே வந்த 3 பைக்குகள் மீது மோதியது. இதில், பில்லுாரைச் சேர்ந்த இன்ஜினியர் கருணாகரன், 41; சம்பவ இடத்திலேயே இறந்தார். பைக்கில் பயணம் செய்த கருணாகரன் மனைவி பாக்கியலட்சுமி, 36; மற்றொரு பைக்கில் சென்ற ராதாபுரம் மூர்த்தி, 40; அவரது மகன் குரோஷின், 7; மற்றொரு பைக்கில் வந்த வாலிபர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, அடையாளம் தெரியாத வாலிபர் இறந்தார். போலீஸ் விசாரணையில், விபத்தில் இறந்தவர் விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மகன் வல்லரசு, 24; எனவும் உறவினர் வீட்டிற்கு சென்று வரும் வழியில் விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.