அவலுார்பேட்டையில் ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி பஜனை கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (செப்.8) நடந்தது. விழாவையொட்டி, கடந்த 7ம் தேதி கணபதி யாகத்துடன் விழா துவங்கியது. நேற்று (செப்.8) காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனையைத் தொடர்ந்து 8: 30, மணிக்கு கடம் புறப்பாடாகி கோபுர கலசங்களுக்கு புனித ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில் சுவாமி திருக்கல்யாணமும், தொடர்ந்து இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலாவும் நடந்தது.